--- --:--:-- --

குழந்தை இல்லாததால் மருமகளை கொலை செய்த மாமியார்..!

8

திருவாரூர் அருகே குழந்தை இல்லாத ஆத்திரத்தில் மருமகளை இரும்பு கம்பியால் அடித்து மாமியாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே தில்லைவிலாகம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.

 

இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்த நிலையில் குழந்தை இல்லை என்பதால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. கடந்த 27ஆம் தேதி மகேந்திரன் வெளியூர் சென்ற நிலையில் தனலட்சுமி வீட்டில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

 

போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியபோது மாமியார் மற்றும் நாத்தனாரின் 15 வயது மகன் ஆகிய 2 பேரும் தனலட்சுமி இரும்பு கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்தது.

 

சொத்தை பிரித்து தருமாறு கேட்ட போது உருவான பிரச்சினையில் கொலை நடந்தது உறுதியானதால் 2 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon