சமாதியில் இருக்கும் நித்தியானந்தா..!
சமாதியில் தங்கியிருக்கும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை என நித்யானந்தா இணையத்தில் வெளியிட்டிருக்கும் தகவல் பலகையில் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. தனித்தீவு கைலாசா, கரன்சி பாஸ்போர்ட் என செட்டிலான நித்தியானந்தா பக்தர்களுடன் தினமும் அருளாசி வழங்கி வந்தார்.
இதனிடையே கடந்த சில வாரங்களாக அவர் ஆன்லைனில் தரிசனம் கொடுக்காத நிலையில் அவர் எங்கே என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அவரோ திடீரென சமாதியில் இருக்கிறேன் எனவும் தனக்கு ஏகப்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் மீண்டும் ஒரு பதிவை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதனால் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். சமாதியில் ஐக்கியமான தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை எனவும் அவர் கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





