ஆபாசத்தில் ஈடுபட்டால் இனி அதிரடி..!
கோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார். திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்திருந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தமிழ்செல்வி பல நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





