சென்னை மாநகர் முழுவதும் செல்போன் பாதிப்பு..!
மின்தடை மற்றும் செல்போன் தொடர்புகள் போன்றவற்றால் சென்னை மாநகர் முழுவதும் மக்கள் சிறிது நேரம் சிரமத்தை சந்திக்க நேர்ந்தது. சென்னையில் இன்று காலை லேசான தூறல் தொடங்கி பல இடங்களில் பலத்த மழையாக மாறியது. காலை 9.30 மணி அளவில் செல்போன் சேவை திடீரென முடங்கியது.
நெட்வொர்க் சிக்னல் கிடைக்காததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஒருவருக்கு ஒருவர் போன் பேச முடியாமலும் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வெளியிடங்களில் தங்களுடன் தொடர்பு கொண்டு பேச முடியாமல் தவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





