நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவன்..!
புதுக்கோட்டை அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் வெளியாகி மனதை கனக்கச் செய்கிறது.
ரம்ஜான் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற மாணவர் முகமதுக்கு அதுவே இறுதி பயணமாக அமைந்தது. அன்னவாசல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அப்துல்லாவின் மகன் முகமது சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு சென்ற அவர் தனது நண்பர்களோடு அந்த பகுதியில் தனியார் கல்லூரி அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அவர் தண்ணீருக்குள் பாய்வதை சக நண்பர்கள் கைபேசியில் படம் எடுத்து மகிழ்ந்தனர். தண்ணீருக்குள் என்ன நடந்ததோ தெரியவில்லை.
சற்றுநேரத்தில் அவர் தண்ணீருக்குள் மூழ்கினர். செய்வதறியாது நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
அவரது உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குடும்பத்தினர், நண்பர்கள், ஊர் மக்கள் என அனைவரும் இந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியில் இருக்கின்றனர்.






