நடிகர் விமல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!
நடிகர் விமல் 5 கோடி ரூபாய் பணம் பெற்று திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெரம்பலூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் கோபி என்பவர் கொடுத்த புகாரில் கடந்த 2016 ஆம் ஆண்டு மன்னர் வகையரா திரைப்படத்திற்காக நடிகர் கமல் 5 கோடி ரூபாயை பெற்றதாகவும், லாபத்துடன் திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்ததாகக் கூறினார்.
திரைப்படத்தின் மூலம் நல்ல லாபம் கிடைத்த நிலையிலும், நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி தன்னிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. பல மாதங்கள் கழித்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்ததாகவும் அவர் புகார் அளித்தார்.
தொகையை திருப்பித் தராமல் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




