--- --:--:-- --

நாக சைதன்யா உடன் மீண்டும் இணைகிறாரா சமந்தா !

11

டிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த வருடம் அக்டோபரில் விவகாரத்தை அறிவித்தனர். காதல் திருமணம் செய்துகொண்டு நான்கு வருடங்களே ஆகும் நிலையில் அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

 

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஒன்றாக நடிப்பதாக முன்பே ஒப்புக்கொண்ட ஒரு படத்திற்கு தற்போது விவகாரத்தால் சிக்கல் வந்திருக்கிறது. ஓ பேபி படம் இயக்கிய நந்தினி ரெட்டியின் அடுத்த படத்தில் தான் அவர்கள் ஜோடியாக மீண்டும் நடிக்க இருந்தனர்.

 

ஓ பேபி ஷூட்டிங் நேரத்திலேயே அந்த கதையை அவர் கூறி ஒப்புதல் வாங்கி இருக்கிறார்.இந்நிலையில் தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே பிரிந்துவிட்டதால் இந்த படத்தில் ஒன்றாக நடிக்க முடியாது என மறுத்துவிட்டதாக டோலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

 

அதனால் நந்தினி ரெட்டி நாக சைதன்யாவை நடிக்க வைத்து, சமந்தாவுக்கு பதில் வேறொரு நடிகையை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது.

 

இருவரிடமும் பேசி ஒன்றாக நடிக்க வைக்க அந்த இயக்குனர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாராம். அவர் சமந்தாவுக்கு மிக நெருக்கமான இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நந்தினி ரெட்டி பிறந்தநாளுக்கு சமந்தா உருக்கமாக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து பதிவு போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon