நண்பனுடன் தவறான உறவு வைத்திருந்ததாக சந்தேகத்தில் காதல் மனைவி கொடூரமாக கொலை..!
கோவை மாவட்டம் சங்கராபுரம் அருகே திருமணமான சில மாதங்களிலேயே காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்யப்பட்டார்.
காமராஜர் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன நாகார்ஜுனா என்பவரும் இந்திரா நகரைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தனது நண்பருடன் மனைவி தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகம் அடைந்த அவர் மனைவியுடன் சண்டையிட்டு கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு சென்றுள்ளார்.
அதன்பிறகு மதுபோதையில் மனைவியை கொலை செய்ததை நண்பர்களிடம் கூறியதாகச் சொல்லப்படும் நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் போக்குவரத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




