குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை..!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. கிராமத்தை சுற்றிலும் அண்மைக்காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை நடமாட்டத்தை கண்ட அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





