நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலி..!
சென்னை தேனாம்பேட்டையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமான கார் மோதியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தேனாம்பேட்டையில் இனோவா கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக காரில் இருந்த நபர்களும் காரை ஓட்டி வந்த ஓட்டுநரும் அதேபோல காரில் பின் இருக்கையில் அமர்ந்து பிரபல இயக்குனரும் நடிகருமான டி ராஜேந்தர் அவரது மகள் வழி பேத்தி உடல் நலக் குறைவு காரணமாக தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வீடு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் விபத்து ஏற்பட்டவுடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து அடிபட்ட முதியவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





