--- --:--:-- --

பாம்புகளை தனது அசைவுக்கு ஏற்ப அசைக்க முயன்ற போது விபரீதம்..!

4

ர்நாடக மாநிலம் திருச்சூரை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான சையத் என்பவரை நாகப்பாம்பு தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதற்கு பிடித்த மூன்று நாகப்பாம்புகளை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார்.

 

கைகளை நகர்த்தி பாம்புகளை போல் அசைக்க முற்பட்டார். அப்போது நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராத வேளையில் சட்டென்று அவர் மீது பாய்ந்து காலை கடித்தது. அதனை இழுக்க முயன்றும் பாம்பு தன் பிடியை விடவில்லை.

 

20 வயதான சையத் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாம்பு கடித்த பின்னர் நாற்பத்தி ஆறு விஷ ஊசி போடபட்டதாகவும் சொல்லப் படுகிறது. நாகப்பாம்புகளை கையாளும் மோசமான வழிமுறை இது என குறிப்பிட்டு ஐஎப்எஸ் அதிகாரி சுஷாந்தா நந்தா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon