--- --:--:-- --

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக ஃபேஸ்புக்கில் வெளியிட்ட நபர் கைது..!

3

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.

 

பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முனிஸ்வரர் என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon