--- --:--:-- --

கொரோனா தொற்றுக்கு பிறகு பக்கவாதம் அதிகரிப்பு..!

7

கொரொனா தொற்றிற்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக நரம்பியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பெரியார் பல்கலை கழகத்துடன் இணைந்து நியூரோ பவுண்டேஷன் அமைப்பு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதனை துணைவேந்தர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனரும் நடிகருமான நடராஜன் கலந்து கொண்டார்.

 

அப்போது பேசிய அவர் பக்கவாதம் தற்பொழுது 4 பேரில் ஒருவருக்கு வருவதாகவும் இந்தியாவில் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மலேரியா, காசநோயை விட பக்கவாதத்தால் தான் உயிர் இழப்பு அதிகம் ஏற்படுவதாகவும் சர்வதேச அளவில் இரண்டு கோடி பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகவும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார்.

 

குறிப்பாக கொரொனா தொற்றிற்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்ட இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon