--- --:--:-- --

உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க வேண்டும்..!

1

க்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர ஒன்றிய அரசின் உதவி தேவைப் படுவதாக தெரிவித்துள்ளார்.

 

சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்தில் இருந்து குடியேறியவர்கள், உக்ரைனில் சிக்கித் தவிப்பதாக அழைப்புகள் வருவதாக முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழர்கள் பாதுகாப்பாக உக்ரைனில் இருந்து வெளியேற மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் எனவும் அதற்காக சிறப்பு விமானங்களை இயக்கவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon