உரிய பராமரிப்பின்றி இயக்கப்படும் அரசு பேருந்து..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு பேருந்து உரிய பராமரிப்பின்றி இயக்கப்படும் நிலையில் பேருந்துகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பெரும்பாலான நகரப் பேருந்துகளில் உரிய பராமரிப்பு மேற்கொள்ளப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பூம்புகாரில் இருந்து சீர்காழி வரை இயக்கப்படும் நகர பேருந்து ஒன்றில் பக்கவாட்டில் தகரங்கள் பெயர்ந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் இருந்தது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள பேருந்துகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





