சசிகலா புஷ்பாவுக்கு விவாகரத்து நோட்டீஸ்..!
முன்னாள் எபி சசிகலா புஷ்பாவுக்கு அவரது கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சசிகலா புஷ்பா தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2008ஆம் ஆண்டு வழக்கறிஞரான ராமசாமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ராமசாமி விவாகரத்து கேட்டு முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் திருமணத்திற்குப்பின் சசிகலா புஷ்பா பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் இதுதொடர்பாக மதுரை, தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





