--- --:--:-- --

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!

1

ன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

 

குமரி கடல் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வட கடலோர மாவட்டங்கள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon