மலைப்பாம்பை வண்டியின் பின்புறம் வைத்து எடுத்து சென்ற நபர்..!
கோழிக்கோட்டை சேர்ந்த ஜித்து என்பவர் மதுபோதையில் மலைப்பாம்புடன் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இவர் சென்ற பாதையில் சாலையோரத்தில் மலைப்பாம்பு படுத்துக்கொண்டு இருந்துள்ளது.
அப்பொழுது மதுபோதையில் இருந்த ஜித்து மலைப்பாம்பை பிடித்து உள்ளார். பின்னர் அதை பின் இருக்கையில் வைத்து ஓட்டி சென்றுள்ளார். சிலர் இதை பார்த்துள்ளனர், நிறுத்தக்கோரி கூச்சலிட்டனர், மது போதையிலிருந்த அவர் மலைபாம்புக்கு முத்து என்று பெயரிட்டுள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





