--- --:--:-- --

காட்டுயானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியான 5 வயது சிறுமி.!

7

வால்பாறை அருகே கேரள மாநிலம் கண்ணன் குறிச்சி பகுதிக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் 5 வயது சிறுமி பலியாகியுள்ளார். அதிரப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் கண்ணக்குறிச்சி என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று சுற்றி வந்துள்ளது.

 

இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்களும், பணிபுரிந்தவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் யானை வருவதை கண்டு அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

 

ஆனால் அவர்களுடன் வந்த சிறுமி யானையிடம் சிக்கிக்கொண்டனர். யானை மிதித்ததில் 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற யானையுடன் போராடிய அவரது தந்தை மற்றும் தாத்தா படுகாயமுற்றனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சத்தம் எழுப்பி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon