--- --:--:-- --

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை..!

6

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை நடமாட்டம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அங்குள்ள பகுதியை சுற்றிலும் அண்மைகாலமாக கரடி சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

இரவு நேரத்தில் சிறுத்தை உலாவரும் காட்சி அங்கிருந்த வீட்டில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon