--- --:--:-- --

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை..!

1

மிழ்நாட்டில் 12,838 பதவி இடங்களுக்கு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில் இன்று அவை பரிசீலனை செய்யப்படுகின்றன.

 

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மாநகராட்சிகளுக்கு 1,347 வார்டு உறுப்பினர்களும், நகராட்சிகளுக்கு 3 ஆயிரத்து 843 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சிகளுக்கு 7,621 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து வேட்புமனுதாக்கல் நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளில் காலை முதலே அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் விறுவிறுப்பாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

 

தமிழகம் முழுவதும் நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. எனினும் மதுரை உட்பட பல்வேறு இடங்களில் ஐந்து மணிக்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

 

அவை அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும் எனவும், ஏழாம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் கணக்கில் இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon