--- --:--:-- --

மக்கள் நலனை மறந்து பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது..!

1

க்களின் நலனை மறைந்த நிதிநிலை அறிக்கை என்று மத்திய பட்ஜெட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் அலங்காரத்தில் நிறைந்த பாஜகவின் வழக்கமான நிதிநிலை அறிக்கை ஆகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் விவாத நிலையை வழங்கவில்லை என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்கள் மத்திய நிதிநிலை அறிக்கையில் இல்லை என்றும் கோதாவரி, பெண்ணாறு, காவிரி நதிநீர் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டினை கூட காண முடியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

 

எனவே தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட ராணுவ திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் இந்த நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான நிதியை 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைத்திருப்பது அந்த திட்டத்தை முடக்குவதற்கான முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார்.

 

மாநில அரசுகளுக்கு மொத்த நிதி பற்றாக்குறை வரப்பு 4 விழுக்காடு என சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுத் தொகையை வரும் ஜூன் மாதத்தில் நிறைவடையும் சூழலில் இந்த தொகை வழங்குவதை தொடர வேண்டும் என்று மாநில அரசுகளின் கோரிக்கையின் புறக்கணித்து இருப்பது ஒன்றிய அரசின் மனப்பான்மையை காட்டுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon