--- --:--:-- --

20 நிமிடங்களில் செல்போனில் கொரோனா பரிசோதனை..!

11

செல்போன் மூலம் கொரொனா பரிசோதனை செய்து கொள்ளும் முறையை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். கொரொனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய ஆர்டிபிசிஆர் முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

 

இந்த முறையில் பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ள பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய செல்போன் செயலியை உருவாக்கியுள்ளனர்.

 

செல்போன் மூலம் 20 நிமிடங்களில் பரிசோதனை செய்து விடலாம். இந்த பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எளிய முறை பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon