குக்கருக்குள் புகுந்த நல்ல பாம்பு..!
கடலூர் அருகே குக்கரில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து பாம்பு பிடி வீரர்கள் பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தார். மீனாட்சி நகரை சேர்ந்த இளமாறன் என்பவரது வீட்டு சமையல் அறைக்குள் வைக்கப்பட்டிருந்த குக்கரில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளமாறன் குடும்பத்தினர் வீட்டை விட்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுபற்றி பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று குக்கரை திறந்து தப்பிக்க முயன்ற நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக அருகில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். குக்கரில் பாம்பு இருந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





