சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி..!
ஆந்திர சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக தன்னுடைய சொந்த தொகுதி உட்பட ஆந்திராவின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





