ஜனவரி 31 வரை விடுமுறையாக கருத வேண்டாம்..!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடுமுறை என கருதாமல் வீட்டில் இருந்து கல்வி கற்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறை என கருதாமல் பொது தேர்வு மாணவர்களுக்கு கல்வி கற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை கற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.