தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்ற சென்ற தாய் பலத்த காயம்..!
வேலூர் இரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த தாய் மற்றும் கைக்குழந்தை நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தாய் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த யுவராணி என்ற பெண் தனது கைக்குழந்தையுடன் பெங்களூரு செல்ல காட்பாடி ரயில் நிலையத்தில் காத்திருந்தார். நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்தது.
இதனால் குழந்தையை காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்ததால் தாய் மீது ரயில் மோதியது. தண்டவாளத்தின் இடையில் சிக்கிய குழந்தை மற்றும் தாய் மீட்கப்பட்டனர்.
குழந்தைக்கு எந்த காயம் ஏற்படாத நிலையில் பலத்த காயம் அடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





