பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் போது பெற்றோரும் உடன் வரவேண்டும்..!
பள்ளிகளில் தடுப்பூசி செலுத்த மாணவர்களுடன் பெற்றோர் உடன் வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் அரசின் உத்தரவுப்படி நடப்பு கல்வியாண்டில் திங்கள்கிழமை முதல் பள்ளி வளாகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அரசு மருத்துவர்கள் தொடர்பு கொள்ளும்பொழுது போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தப்படும் நாட்களில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அனைத்து மாணவ மாணவிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது குறித்த விவரம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து தடுப்பூசி போடும் நாட்களில் பெற்றோரும் உடன் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி அமைந்துள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தகவல் அளித்து அவர்களையும் இந்த நிகழ்வில் பங்கு பெறச் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





