நிச்சயமாக தமிழகத்தில் நோயின் தாக்கம் அதிகரிக்க கூடும்..கவனம் தேவை எனக்கூறிய முதல்வர்..!
நாட்டில் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் ஓமிக்ரான் பரவி வருவதை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைத்தார்.
தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொற்று பரவல் தொடங்கியுள்ளது எனவும் வேகம் அதிகரிக்கும் நிலையில் அதனைக் கண்டு மக்கள் பீதி அடையாமல் உஷாராக இருக்க வேண்டும் எனவும், மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை தடுப்பூசி விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





