4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!
வளிமண்டலமேலடுக்கு சுழற்சியால் நாகை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 4 இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் தலா 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





