--- --:--:-- --

பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு..!

3

கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக மீனவரின் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் புதிய கல்பாக்கம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் மணி. இவர் தனது மகன் மற்றும் சகோதரருடன் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று உள்ளார்.

 

அப்போது கடலில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. இதனால் கடலில் படகு கவிழ்ந்ததில் மணி பரிதாபமாக உயிரிழந்தார். மணியின் மகன் மற்றும் சகோதரர் உயிர் தப்பியுள்ளனர். பின்னர் படகில் கடலுக்குள் சென்று உடலை மீட்டு வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon