முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு..!
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்க மணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை 6:30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனை நடைபெறும் ஐந்தாவது முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் 11 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் 9 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொள்கின்றனர்.
சேலம், கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில் தங்க மணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. கர்நாடகாவில் ஒரு இடத்திலும் ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 85 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






