பள்ளி செல்ல தாய் வற்புறுத்தியதால் மாணவன் தற்கொலை..!
புதுச்சேரியில் பள்ளி செல்ல விரும்பாத மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள சுந்தரர் வீதியை சேர்ந்தவர் நாகஜோதி.
கணவர் கிருஷ்ணன் உயிரிழந்த நிலையில் 15 வயதான மகனுடன் வசித்து வந்தார். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு செல்ல சிறுவனுக்கு விருப்பம் இல்லாத நிலையில் தான் அவரை பள்ளி செல்ல வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த மாணவன் வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





