ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை..!
தமிழகத்திலும் ஓமிகிரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
வரும் 15ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் அதனை நீட்டிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். கொரொனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலங்களிலும் ஓமிக்ரான் பரவி வருகிறது.
எனவே தமிழ்நாட்டிலும் ஓமிகிரான் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முக கவசம், தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்றும் வகையிலான முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






