பூசாரி கரும்பால் அடித்ததில் பெண் உயிரிழப்பு..!
நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு சிறப்பு பூஜை என்ற பெயரில் பூசாரி ஒருவர் கரும்பால் தலையில் அடித்ததில் பெண் உயிரிழந்தார். பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சன்னராயபட்னா பகுதியில் 47 வயதான பார்வதி என்ற பெண் வசித்து வந்தார்.
இவருக்கு நீண்ட நாட்களாக கடும் தலைவலி இருந்துள்ளது. தலைவலிக்காக பல மருத்துவர்களை பார்த்தும் தலைவலி குணமாகவில்லை. இதனால் இனி மருத்துவர்களை பார்த்து பயனில்லை எனக் கரு அருகிலுள்ள அம்மன் கோயிலில் பூஜை செய்து வந்துள்ளார்.
அந்த கோயில் பூசாரி சிறப்பு பூஜை செய்தால் உங்களது தலைவலி சரியாகி விடும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பார்வதி சிறப்பு பூஜைக்கு தயார் செய்துள்ளார். அங்குதான் அந்த எதிர்பாராத விபரீதம் நடந்துள்ளது.
பூஜைகள் பல செய்தபோதும் பூசாரி இறுதியில் பார்வதிக்கு தலைவலி குணமாக வேண்டும் என கரும்பால் பெண்ணின் தலையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





