குரூப் கேப்டன் வருண்சிங் உடல் நிலையில் முன்னேற்றம்..!
குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிர் பிழைத்தார்.
அவருக்கு 80 சதவீத தீக்காயத்துடன் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளதாகவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





