கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்தில் 53 பேர் உயிரிழப்பு.!
மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக அகதிகள் உட்பட பலரை ஏற்றிக்கொண்டு மெக்சிகோவில் ஜியாபாஸ் மாகாணம் வழியாக அமெரிக்க எல்லைக்குள் சென்று கொண்டிருந்த ஆபத்தான வளைவை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே 53 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 58 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காயமடைந்தவர்கள் அதிகளவில் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






