டாஸ்மாக் நேர மாற்றத்துக்கு எதிர்ப்பு..!
திருச்சி தொட்டியம்பட்டி அடுத்த கொசவம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் கூறியிருக்கிறார். கொசவம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியராக சிவக்குமார் என்பவர் பணியாற்றினார்.
கடந்த 22ஆம் தேதி மாதிரி நுரை தள்ளியபடி மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு நவம்பர் 30-ஆம் தேதி சிவக்குமார் உயிரிழந்தார். முதன்மை கல்வி அலுவலருக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
அதில் கொசவம்பட்டி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் மாணிக்கவாசகம் என்பவர் சிவகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவ்வப்போது தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகுமார் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகு சந்தேகிப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். பள்ளியில் ஆசிரியர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






