--- --:--:-- --

500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!

4

மணிப்பூரில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் உள்ள நகரில் 54 கிலோ பிரவுன் சுகர் மற்றும் 154 கிலோ ஐஸ்மெட் உட்பட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், அசாம் ரைபிள் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் மியான்மரில் உள்ள மண்டெலியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுக்கு சொந்தமானது என்ற தகவல் வெளியானது.

 

அவர் சீன நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் பெண்ணை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon