--- --:--:-- --

தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

6

தென் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டிய பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடித்து வருகிறது.

 

இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மேலும் கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

டெல்லியில் நேற்று சில இடங்களில் லேசான மழை பெய்த நிலையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon