புதுச்சேரியில் 1 – 8 வரையிலான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன..!
புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு 20 மாதங்களுக்கு பிறகு இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. கொரொனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் நேரடி வகுப்புகள் தொடக்க உத்தரவிட்டுள்ள மாநில பள்ளிக் கல்வித்துறை அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் மதியம் வரை மட்டுமே வகுப்புகள் இருக்க வேண்டும். பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை பெற்றோரின் அனுமதி அவசியம் எனவும், ஆசிரியர்களுக்கும், ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளியில் மாணவர்களை வரவேற்க தயாராகி உள்ளனர். ஏற்கனவே இயங்கி வந்த 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் முழு நேரமாகப் மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகளில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.






