தனது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றை நட்ட ராஷி கண்ணா..!
நடிகை ராசி கண்ணா தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டார்.இது இவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்த ராசிகன்னா பின்னர் அடங்கமறு, சங்க தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இந்த பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு இவரது ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






