--- --:--:-- --

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஆண்ட்ராய்டு பரிசு..!

9

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் செல்போன் பரிசளிக்கப்பட்டது.

 

அரூர் அருகே புதூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்படும் எனவும் குலுக்கல் முறையில் ஒருவருக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

 

இதனையடுத்து புதூர் கிராமத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத 87 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் குலுக்கல் முறையில் ஒருவருக்கு செல்போனும் வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon