--- --:--:-- --

காதலித்த மாணவனும் மாணவியும் மாயமான நிலையில் சடலமாக மீட்பு..!

11

கள்ளக்குறிச்சி அருகே காதலித்து வீட்டை விட்டு வெளியேறி தாக கூறப்படும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனும், மாணவியும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். அந்த மாணவனும் மாணவியும் ஒரே வகுப்பில் படித்து வந்த நிலையில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

கடந்த 20ஆம் தேதி இருவரும் ஊரிலிருந்து மாயமாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் தேடிய உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

இருவரும் இருவேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில் கொலையா தற்கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon