--- --:--:-- --

சசிகுமாருக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினி..!

10

சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ராஜவம்சம். இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த பட விழாவின்போது சசிகுமார் கூட்டு குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை தன்னிடம் கூறியபோது தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனவும் கூறினார்.

 

இந்த படத்தில் இன்னொரு மிகப்பெரிய பலம் தயாரிப்பாளர் ராஜா என தெரிவித்த அவர் ரஜினி சார் பேட்டை படத்தில் தனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார் எனவும் படத்தை தயாரிக்க மட்டும் வேண்டாம் என்றும், எதற்கு சொல்கிறேன் என்றால் அதற்கு அவ்வளவு சிறப்பும்,பொறுமையும், திறமையும் வேண்டுமென அவர் சொன்னதாக சசிக்குமார் குறிப்பிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon