தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழகத்தில் வரும் 24-ஆம் தேதி முதல் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை மழை நீடிப்பதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரையிலான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 24-ஆம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






