--- --:--:-- --

குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக சோதனை..!

4

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரத்தில் கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பகிர்வது, பார்ப்பது போன்ற பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 3 புதிய வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

 

இது தொடர்பாக நாடு முழுவதும் 77 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பெட்டதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதித்யன் என்ற இளைஞர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை எடுத்துச் சென்று சிபிஐ போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon