கோவையில் ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை..!
கோவையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக எழுந்த புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு பயின்ற மாணவி 6 மாதங்களுக்கு முன்பு மாற்றுச் சான்றிதழ் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. வேறு பள்ளியில் சேர்க்க முயன்று வந்த நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அவர்களை சும்மா விட கூடாது என்று மகள் கடிதம் எழுதி வைத்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இடம் மாற இருப்பதால் மாற்று சான்றிதழ் கொடுத்து விட்டதாக தலைமையாசிரியர் கூறியுள்ளார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளி ஆசிரியர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தொடர்ந்து பாலியல் வன்கொடுமை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






