கர்நாடகாவில் 5 முறை உணரப்பட்ட நிலநடுக்கம்..!
கர்நாடக மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி கிராமப் பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவில் நான்கு முறை என மொத்தமாக ஐந்து முறை நிலநடுக்கத்தை கிராம மக்கள் உணர்ந்ததால் அச்சமடைந்துள்ளனர்.
சிந்தாமணி, விண்டகள்ளி, அப்சனகள்ளி பகுதிகளில் நேற்று இரவு 4 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்பொழுது வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை உருண்டோடின.
இந்த நிலையில் இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நான்கு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வந்து தஞ்சம் அடைந்தனர்.






