தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தனது சொந்த தயாரிப்பில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். வாசி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை விஷ்ணு இயக்குகிறார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக டொவினோ தாமஸ் நடிக்க உள்ளார். ஏற்கனவே தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவியுடன் வேதாளம் ரீமேக், மகேஷ் பாபுவுடன் சர்க்கார், மோகன்லாலுடன் ஒரு படம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது சொந்த தயாரிப்பிலேயே படம் எடுக்க உள்ளார்.






